வடசென்னையில் சிம்புதான் ஹீரோ! வெற்றிமாறன் பளிச்!

சிம்புவை வைத்து, வெற்றிமாறன் இயக்குவதாக இருந்த வடசென்னை திரைப்படம் கைவிடப்பட்டுவிட்டதாக வெளியான செய்திகளை அடுத்து, அதை மறுத்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

சில தொழில் நுட்ப பிரச்சனைகள் காரணமாக படம் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும், நிச்சயம் வடசென்னை திரைப்படத்தை இயக்குவேன் என்றும் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

பொல்லாதவன், ஆடுகளம் போன்ற வெற்றிப் படங்களை தனுஷை வைத்து இயக்கியவர் இயக்குனர் வெற்றிமாறன். அவர் சிம்புவை வைத்து இயக்குவதாக இருந்த வடசென்னை திரைப்படம் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்குள்ளாகவே முடிந்து போனதாக தகவல்கள் வெளியாயின. அதற்கு பதில் அளித்துப் பேசிய வெற்றிமாறன், “ஆடுகளம் படம் வெளியாவதற்கு முன்பே, வடசென்னை படம் பண்ணலாம் என்று முடுவு எடுத்திருந்தேன்.

வட சென்னை படத்தின் கதை எனக்கு ரொம்ப அன்யோன்யமாக வந்திருந்தது. உடனே படம் இயக்க முடிவு செய்து, ஆரம்பித்தும் விட்டோம். ஆனால், சில தொழில் நுட்ப பிரச்சனைகள் காரணமாக இப்போது வடசென்னை படத்தை இயக்க முடியாத நிலையில் இருக்கிறோம். தொழில் நுட்ப பிரச்சனைகள் சரியாவதற்குள், தனுஷ் அவர்களை வைத்து ஒரு படம் இயக்கிவிட்டு மீண்டும், வடசென்னை படத்தைக் கையில் எடுப்பேன். நிச்சயம் சிம்புதான் கதாநாயகன்” என்று வெற்றிமாறன் கூறியுள்ளார்.

சிம்புவுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்யப் போறோம்-டி.ராஜேந்தர்

எனது மகள் இலக்கியாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். அது முடிந்ததும் சிம்புவுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று இயக்குநர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
விஜய டி.ராஜேந்தர்-உஷா தம்பதிக்கு சிலம்பரசன், குறளரசன் மற்றும் இலக்கியா என மூன்று பிள்ளைகள். இதில் மூத்தவரான சிமபு நடிகராகி விட்டார். குறளரசனும் விரைவில் நடிகராகப் போகிறார். மகள் இலக்கியா சினிமா பக்கமே திரும்பிப் பார்க்காமல் வளர்ந்தவர்.
இவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாம். இலக்கியா திருமணத்திற்குப் பின்னர் சிம்புவுக்குத் திருமணம் நடைபெறுமாம்.
ஆந்திர மாநிலம் காளஹஸ்திக்கு நேற்று தனது மனைவி, மகளுடன் வந்த ராஜேந்தர் அங்கு சாமி கும்பிட்டார். பின்னர் செய்தியாளர்கள் அவர்களை சுற்றிசத் சூழ்ந்தனர். அப்போது சிம்பு திருமணம் குறித்து கேட்டபோது, முதலில் இலக்கியா திருமணம் நடைபெறும்.அதன் பின்னர் சிம்பு திருமணம்தான்.சீக்கிரமே சிம்பு திருமணம் நடைபெறும் என்றார் ராஜேந்தர்.
உங்களது அடுத்த படம் என்ன என்ற கேள்விக்கு ஒரு தலை காதல் என்ற படத்தை இயக்கப் போகிறேன் என்றார்.
குறளரசன் எப்போது ஹீரோ ஆவார் என்ற கேள்விக்கு, இந்த ஆண்டு இறுதியில் குறளரசன் அறிமுகமாகும் படத்தை அறிவி்ப்போம் என்றார்.

விருதுகள் வேண்டாம் விசில் சத்தம் போதும் : சிம்பு

நடிகர் சிம்பு சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு துவங்கிய வாலு படத்தில் பிசியாக உள்ளார். இப்படத்திற்கான அறிமுக டீஷர் வெளியாகி ஹிட் ஆகியுள்ளது. ஆனால் அதில் வரும் வசனங்கள் தனுஷை தாக்குவது போல் அமைந்துள்ளது. 

இப்படத்தில், சிம்புவைப் பார்த்து ஹன்சிகா, ஒரு சில பசங்கள பாக்க பாக்கத்தான் புடிக்கும், ஆனா உன்ன மாறி பசங்கள பாத்த உடனே புடிச்சிடும் என்று வசனம் பேசுகிறார் 

பாலா, செல்வராகவன் போன்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்க நான் விரும்பமாட்டேன். அதுபோன்ற கதைகளில் தனுஷ் வேண்டுமானால் நடிப்பார். அவர் தான் நடிகன். என் படங்கள் அனைத்தும் பொழுதுபோக்குப் படங்களாக இருக்கும். எனக்கு தேசிய விருதோ, ஆஸ்காரோ தேவையில்லை. என் படங்கள் ஓடும் திரையரங்குகளில் விசில் சத்தமும், கைதட்டலும் கேட்டால் போதும் என்று கூறுகிறார் சிம்பு. 
Source : Dinamani

சிம்புவால் என் படம் தாமதம் ஆனதே கிடையாது : நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி

உதவி இயக்குநராகும் ஆசையில், சிவகங்கையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் சினிமாவில் இருக்கிறார். ராசி படம் தொடங்கி குஷி, ரெட், வில்லன், வரலாறு, காளை, ரேணிகுண்டா என்று பல படங்களை தயாரித்தவர்,

இப்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை எடுத்து வருகிறார். இதனையடுத்து மீண்டும் சிம்புவை வைத்து, புதுமுகம் விஜய்சந்தர் இயக்கத்தில் வாலு என்ற படத்தை தயாரிக்கிறார்.

 சமீபத்தில் அவரை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது, 30 வருட சினிமா அனுபவத்தில், சினிமா ஒரு நல்ல வளர்ச்சியில் உள்ளது. ஆரோக்கியமாக இருக்கு. நிறைய புதுமுகங்கள் வராங்க, போறாங்க ஆனால் சினிமா அப்படியேத்தான் இருக்கு. படத்திற்கு என்ன தேவையோ அது தான் பட்ஜெட்டை முடிவு செய்யும். மற்றபடி சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட் என்று எந்த படத்தையும் பிரிக்க முடியாது. 

சிம்புவை வைத்து எப்படி தொடர்ந்து படம் பண்ண முடியுது என்று அவரிடம் கேட்டால், காளை படம் 80 நாளில் முடிந்தது. வேட்டை மன்னன் படம் இடைவேளை வரை முடிந்து இருக்கிறது. சிம்புவிடம் இன்று இத்தனை எடுக்கணும் என்று முன்னாடியே சொல்லிவிட்டால் போதும், அதை அப்படியே முடித்து கொடுத்துவிடுவார். சிம்புவால் என் படங்கள் தாமதம் ஆனதே கிடையாது.

மேலும் நான் அஜித்தை வைத்து நிறைய படங்கள் எடுத்‌தேன். ஆனால் இப்‌போது அவர் பட வியாபாரம் பெரிய அளவில் போய்விட்டது. அதனால் என்னால் முடிந்த அளவிலான பட்ஜெட்டில் படம் எடுத்து வருகிறேன். அதுவே எனக்கு திருப்திகரமாக இருக்கிறது.  என் மகனின் 18 வயசு படம் விரைவில் வெளிவர உள்ளது. இப்போதெல்லாம் புதுபடங்கள் வருவது அதிகமாகி கொண்டு போவது நல்ல விஷயம் தான். சினிமா எனக்கு ஒரு பேஷன். கடைசி வரை சினிமாவில் இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
Source : தினமலர்

டிஸ்னிலேண்டில் சிம்பு பட சூட்டிங்!

சிம்பு, வரலட்சுமி நடித்து வரும் போடா போடி படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ஹாங்காங்கில் டிஸ்னி லேண்டில் நடைபெற்றுள்ளது.டிஸ்னி லேண்டில் நடைபெற்ற முதல் இந்தியப் படத்தின் சூட்டிங் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இது குறித்து சிம்பு கூறுகையில் : 
நான் சிறு வயதில் இருந்து பார்த்து ரசித்த கார்ட்டூன் கேரக்டர்களுடன் ஆடிப்பாட வாய்ப்பு கிடைக்கும் என நான் சிறிதும் நினைக்கவில்லை. டிஸ்னி லேண்ட் சூட்டிங் அனுபவம் மிகவும் பிரமாண்டமானது. அங்கு சூட்டிங் நடத்துவதற்கு அனுமதி பெற 90 நாட்கள் காத்திருந்தோம். பாடல் சூட்டிங் குறித்த முழுமையான விளக்கத்தை அளித்த பின்னரே அனுமதி கிடைத்தது.  
இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என நம்புகிறேன் என்றார்.

ஹன்சிகாவுக்கு நான் சிபாரிசு செய்யவில்லை

தொடர்ச்சியாக என் படங்களில் நடிக்க ஹன்சிகாவுக்கு நான் சிபாரிசு செய்யவில்லை என்கிறார் சிம்பு. சிம்பு நடிக்கும் ‘வேட்டை மன்னன்’ படத்தை தொடர்ந்து ‘வாலுÕ படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார் ஹன்சிகா மோத்வானி. சிம்புவின் சிபாரிசால் மீண்டும் ஹன்சிகா தேர்வு செய்யப்பட்டார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. இது பற்றி சிம்பு கூறியதாவது: இப்போதெல்லாம் சந்தோஷமாக இருக்கிறீர்களே… யாரையாவது காதலிக்கிறீர்களா? என்கிறார்கள். நான் சந்தோஷமாக இருந்தால் மற்றவர்களுக்கு சங்கடமாக இருக்கிறதோ என்னவோ? இந்த உலகத்தில் எனக்காக ஒருத்தி பிறந்திருப்பாள். அவரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அவரை கண்டுபிடிக்கும் வரை எனது தேடல் தொடரும். இப்போதைக்கு நடிப்பு, நடிப்பு, நடிப்புதான். 

‘வாலு’ படம் தொடங்குகிறது. சமீபத்தில் இப்படத்திற்காக ஹன்சிகா, சந்தானத்துடன் பங்கேற்ற போட்டோ ஷூட்டும், சிறிய டிரெய்லரும் தயாரானது. விரைவில் அது வெளியிடப்படும். ‘வேட்டை மன்னன்Õ படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. வெளிநாட்டில் படமாக்க வேண்டிய நீண்ட ஷூட்டிங் பாக்கி இருக்கிறது. வாலு படத்தில் ஹன்சிகா மீண்டும் ஹீரோயினாக நடிக்க சிபாரிசு செய்தது ஏன் என்கிறார்கள். அவருக்கு நான் சிபாரிசு செய்யவில்லை. அதற்கு எனக்கு அவச¤யமில்லை. இயக்குனர்தான் ஹன்சிகாவை தேர்வு செய்தார். வாலு படம் காமெடி மற்றும் யூத்தை மையமாக வைத்து உருவாகிறது. இப்படத்திற்கு ஹன்சிகா பொருத்தமாக இருப்பார் என்று இயக்குனர் தீர்மானித்து தேர்வு செய்தார். இவ்வாறு சிம்பு கூறினார்.

வாலு படத்தில் சென்னை இளைஞனாக சிம்பு

சிம்பு நடிக்கும் படத்துக்கு ‘வாலு’ என்று தலைப்பிடப் பட்டுள்ளது. நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிக்கும் படம், ‘வாலு’. இதில் சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கின்றனர். மற்றும் சந்தானம், கணேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். ‘தினம்தோறும்‘ நாகராஜ் உதவியாளர் விஜய் சந்தர் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: இதில் சென்னை இளைஞனாக சிம்பு நடிக்கிறார். எப்போதும் துறு துறுவென்று இருக்கும் கேரக்டர். இதே கேரக்டர் கொண்ட ஹீரோயின். இருவருக்குமிடையே நடிக்கும் கதைதான் படம். இதன் திரைக்கதை பரபரப்பாக இருக்கும். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கிறோம். ஒரு நிமிடம் ஓடும் படத்துக்கான டீஸரை ரெடி பண்ணிவிட்டோம். 

தமன் இசை அமைக்கிறார். சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த மாதம் முதல் ஷூட்டிங் தொடங்குகிறது. படம் தீபாவளிக்கு வெளிவரும். இவ்வாறு விஜய் சந்தர் கூறினார். 

 நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில், ஏற்கனவே ‘வேட்டை மன்னன்’ படத்தில் நடித்துவருகிறார் சிம்பு. இந்தப் படத்தின் அடுத்த ஷெட்யூல் வெளிநாடுகளில் நடக்க இருப்பதாலும் போஸ்ட் புரொடக்ஷ்ஸ் வேலைகள் அதிகமாக இருப்பதாலும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Source : DINAKARAN